ISSN : 2349-6657

நாலடியார் உணர்த்தும் அறக்கருத்துகள்

முனைவர்.சி.வெண்மதி, ம. பிரேமலதா



இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றன. மனிதனின் வாழ்வை அடிப்படையாக கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அந்தந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இலக்கியங்கள் விளங்குகின்றன. இங்ஙனம் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையை வாழ்த்து காட்டிய நம் முன்னோர்கள் தாம் படைத்த இலக்கியங்கள் வழி உணர்த்தியுள்ளனர். சான்றோர் கூறிய அறிவுரைகளைக் கேட்டு அதன்படி வாழும் வாழ்க்கை இனிமையும், எளிமையும் உடையதாகின்றது. அவற்றுள் அற இலக்கியங்கள் மனிதர்களின் நீதிப்பண்பிணை உணர்த்துகின்றது. துறவறம் பற்றியும், இல்லறம் பற்றியும், நிலையான்மை, அறநெறிப்பற்றி கூறும் சிந்தனைகளும் இடம் பெறுகின்றன. சங்கம் மருவிய காலத்தில் இந்நூல் இடம் பெற்றவை ஆகும். சங்கம் மருவிய காலம் என்பது களப்பிரர்கள் ஆண்டகாலம் ஆகும். திருக்குறளுக்கு இணையாக நாலடியார் சிறந்து விளங்குகிறது. மனிதர்களின் காலச் சூழ்நிலையைக் கொண்டு நம் முன்னோர்கள் படைத்த இலக்கியம் ஆகும். வாழ்க்கையில் உண்டாகும் இன்ப துன்பங்கள்இ நெளிவுசுளிவுகளை உணர்ந்து அனுபவம் நிறைந்த அறிவுடைய சான்றோர் கூறும் அறிவுரைகள் நம்மை தவறான பாதையில் செல்லாமல் தடுத்து நல்வழிப்படுத்துகின்றன. வாழ்க்கை அன்புடையதாகவும், பண்புடையதாகவும்இ பிறர்க்குப் பயனுடையதாகவும் விளங்க உயரிய சிந்தனைகளும் அதன்படி செயல்படும். மனப்பான்மையும் அடிப்படையானவை. வாழுகின்ற மக்களுக்கும்இ வாழப்போகின்ற மக்களுக்கும் வாழ்ந்தவர்கள் பாடமாக அமைய வேண்டும். அதாவது ஒருவரின் அனுபவங்கள் மற்றொருவருக்குப் பாடமாக அமைவது மனித வாழ்வின் சாரமாகும். இதனை நன்கு உணர்ந்தவர்கள் நம்முடைய முன்னேர்கள் அதனால் தான் தமது அனுபவங்களைக் கலைகலாகப் பதிவிட்டு வருங்காலச் சமூகத்துக்கு வழிகாட்டியாக விளங்கி வருகின்றனர். எனவே அவர்கள் தங்களின் பட்டறிவு மூலம் கண்ட வாழ்வியல் சிந்தனைகளை இலக்கியங்களின் வழியாகச் சமூகத்திற்கு வழங்கியுள்ளன. அறநூல்களில் ஒன்றான நாலடியார் மக்களுக்கான ஒழுக்க நெறிகளையும், கல்வி, சமுதாயம். போன்ற அமைப்பினைக் கொண்டு அமைகிறது. நாலடியாரின் இல்லறம், துறவறம், நிலையான்மை, ஒழுக்கநெறி பண்பையும் கொண்டு அமைகின்றது.

நாலடியார், இல்லறம், துறவறம், நிலையான்மை, ஒழுக்கநெறி

17/09/2021

291

IESMDT289

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication