ISSN : 2349-6657

நாட்டுப்புறவியல்

K.MANGAIYARKARASI



நமக்குத் தமிழில் கிடைக்கும் மிகத் தொன்மையான எழுத்துச்சான்று தொல்காப்பியரின் தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் வாய்மொழி இலக்கியங்களுக்கும் இலக்கணம் கூறியுள்ளார். ‘பண்ணத்தி’ என்று தொல்காப்பியர் கூறுவது ‘நாட்டுப்புறப் பாடல்களையே’ என்று அறிஞர்கள் சுட்டுகின்றனர். வேறு சிலர் தொல்காப்பியர் சுட்டும் ‘புலன்’ என்பதையே நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்பர். நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப்பாடல்களைப் ‘பண்ணத்தி’ என்றும் இசை குறைந்த பிற பாடல்களைப் ‘புலன்’ என்றும் கருதும் போக்கு காணப்படுகின்றது. தமிழ் மக்களின் நாட்டுப் புற வாழ்வியல் கூறுகளை ஆயும் இயலே தமிழர் நாட்டுப்புறவியல் ஆகும். இலங்கையில் இத் துறை தமிழர் நாட்டாரியல் என்று பெரிதும் அறியப்படுகிறது. தமிழர் நாட்டுப்புற வழக்காற்றியல் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழரின் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் வாய்மொழியாக வழங்கி வந்த பாட்டுக்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள் ஆகியவையும், பார்த்துச் செய்தல் மூலம் பகிரப்பட்ட ஆடல்கள், கூத்து, இசை, விளையாட்டுக்கள், வழக்கங்கள், கைத்தொழில்கள், நுட்பங்கள் மற்றும் கலைகள் ஆகியவையும் தமிழர் நாட்டுப்புறவியலில் அடங்கும்.

நாட்டுப்புறவியல்

17/09/2021

312

IESMDT310

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication