ISSN : 2349-6657

திருமூலர் கூறும் அறம்

மா.மகாதேவி, மா.கௌசல்யா



திருமந்திரமானது சமயத்தை அடிப்படையாக் கொண்டு தமிழ்மொழியில் மிகவும் பழமையானவை எனக் கருதப்படும் நூல்களில் திருமந்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும் தத்துவார்த்தமான கருத்துக்ககளைப் பெரிதும் உள்ளடக்கியது. எனவே தான் இந்நூலினைச் சைவத்தத்துவ நூல் என்று கூறுவர். இத் திருமந்திரமானது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது. திருமுறைகள் பன்னிரெண்டும் தோத்திரம்இ சாத்திரம்இ பிரபந்தம்இ புராணம் என்னும் நான்கு வகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அத்திருமுறைகளில் சாத்திர நூலாகத் திகழ்வவது திருமந்திரமாகும். ஆகமங்களைத் தமிழில் விளக்க வந்த திருமூலர் தன் நூலில் யோகநெறிகளையும். சைவ நெறிகளையும் முறையாக விளக்குவதோடு மட்டுமல்லாமல் வாழ்வியல் நெறிகளுக்கு ஏற்ற ஆங்காங்கே அறக் கருத்துக்களையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். அத்தகைய அறக் கருத்துக்களை எடுத்துரைப்பதன் வாயிலாக மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும் இந்நூல் வழிவகுக்கிறது. மனிதனின் முறையற்ற போக்கினைக் கண்டிக்கும் திருமூலர் மனிதனுக்கு நல்லறங்களைப் புகட்டி அவனை இறைவவழிச் செலுத்த விழைகிறார். திருமூலர் கூறும் அறம் குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

திருமந்திரம்

17/09/2021

382

19372

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication