ISSN : 2349-6657

சங்க இலக்கியம் காட்டும் திணை மகளிர் (எட்டுத் தொகை அகநூல்கள் வழி)

இரா.மணிமேகலை,ப.ஆனந்தி,



ஒரு மொழிக்குப் பெருமை என்பது அந்த மொழியின் தொன்மை மற்றும் அம்மொழியிலுள்ள இலக்கிய வளமும் ஆகும். இலக்கியம் என்பது மனித வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாகும். பண்டைய சமூக வாழ்க்கையை அறிய சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் பெரிதும் உதவுகின்றன. வாழ்க்கைக்குக் காதல் உயிர்நாடி. எனினும், வாழ்வு வளமுடன் அமைய வீரமும் வேண்டும். காதலும் வீரமும் சங்கப் பாடல்களின் மையப்பொருண்மையாகும். அவை அகம் - புறம் எனப்பகுக்கப்பட்டன. புலவர்கள் ஆழ்ந்த உணர்வுகளையும், உண்மைகளையும் பாடல்களாகத் தந்ததைச் சான்றோர்கள் 'எட்டுத் தொகை' 'பத்துப்பாட்டு என்று தொகுத்துத் தந்தனர் . சங்க இலக்கிய்ங்கள் திணை இலக்கியங்கள்; எனப்படும். இவ்விலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை நில இயல்புகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதைப் புலப்படுத்துவதால் இவற்றைத் திணை இலக்கியம் என்பர். அகத்துறைப்பாக்கள்; ஐந்திணைகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டவை. இவ்வைந்திணைகளில் வாழ்ந்த மகளிரின் வாழ்வியலைப் பற்றி எட்டுத்தொகை அகநூல்களின் வழி ஆராய்ந்து அறிந்த செய்திகளை ஒப்பிட்டுப் பார்ப்பது இவ்வாய்வின் நோக்கமாகும்.

எட்டுத் தொகை, சங்க இலக்கிய்ங்கள்

30/08/2019

374

19365

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication