ISSN : 2349-6657

உன்னைப் போல் ஒருவன் நாவல் காட்டும் சமுதாயத்தின் அவலங்கள்

பா.சங்கீதா,த.ஜெயராணி,



சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும். ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட குழவையும் சமூகம் எனலாம். சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் ஏற்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடு. நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பதைப் பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல்இ சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். பொதுவாக சமூகம் என்பது "தமிழர் என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ. "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்” என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிப்பதாகக் கொள்ளலாம். அரசியல் அறிவியலில்இ சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில்இ சமூகம் என்பது மக்கள் கூட்டத்தைக் குறிக்கும். சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் கையாளுகிறது. பல தோற்றப்பாடுகளை தனிப்பட்ட நடத்தைகளாகப் பார்க்க முடியாது. கூட்டுநிலை. தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரதும் வாழ்க்கையைத் தாண்டி நிலைக்கக்கூடியது. மனித நிலைமைகள் எப்பொழுதும் ஆறாவது புலன்கள் தரும் சான்றுகளுக்கும் அப்பால் செல்லுகிறது. நமது ஒவ்வொரு அம்சமும் கூட்டுநிலையோடு பிணைக்கப்பட்டுள்ளது. சமூகத்தால் மிகவும் மோசமாக ஒதுக்கப்படுபவர்கள் பாலியல் தொழிலாளர்கள். சமூகம்இ குடும்பம்இ வாழ்க்கை பேன்றவை தரும் நெருக்கடிகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் வழியின்றி பாலியல் தொழிலாளர்களாக மாறுகிறார்கள். இது ஒரு சமூகத்தின் பிரச்சினை என்ற புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. இத்தகைய சமூக அவலங்கள் குறித்து இப்புதினத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முறை குறித்து அறிவதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும

உன்னைப் போல் ஒருவன் நாவல்

30/08/2019

376-377

19367

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication