ISSN : 2349-6657

அற்புதத் திருவந்தாதி வழி காரைக்கால் அம்மையாரின் பக்திநெறி

முனைவர்.ர.ச. வசுமதி, முனைவர்.சி.வெண்மதி,



இலக்கியங்கள் என்பது மக்களின் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவும் இன்றியமையாததாகம் உள்ளது. மனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இலக்கியத்தை சார்ந்துள்ளான். இலக்கியங்கள் சங்கஇலக்கியங்கள், பக்திஇலக்கியங்கள், அறஇலக்கியங்கள் என்று மக்களின் வாழ்வோடு கலந்துள்ளன. சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வு நிலையை விளக்குகிறது. இதேபோல் மனிதன் நல்நிலையை அடைய இறைவனை வணங்க பக்தி இலக்கியங்களைப் படைத்தான், பக்தி இலக்கியங்கள் மூலமாக தமிழர் தொன்மைகாலம் தொட்டே பக்திநெறிகளை கடைபிடித்தனர் என்பது அறிய முடிகின்றது. இறைவனை அடைய அவனை நாள்தோறும் வணங்க வேண்டும் அப்போது தான் பிறவிப்பயனை பக்தி இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. பக்தி இலக்கியங்கள் பல்லவர் காலத்தில் காணப்படுகின்றன. இவை சமயக்கருத்துகளை கொண்டுள்ளனவாகவும் மக்களிடையே சமயத்தை வளர்க்கும் முறையில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என்ற பல்வேறு சமயங்கள் பரவியிருந்தன. இதில் சைவசமயத்தில் இலக்கியம் பாடுபவர்கள் நாயன்மார்கள் என்றும் திருமாலை பாடுபவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர். பெண்பாற் புலவர்களும் பக்தி இலக்கியங்கள் பாடி சமயத்தை வளர்த்துள்ளனர். இதில் காரைக்கால் அம்மையார். காக்ககைப்பாடினியார், ஆண்டாள் போன்றோரும் அடங்குவர். பக்தி இலக்கியத்தில் சைவ சமயம் சார்ந்த பல இலக்கியங்கள் உள்ளன. நாயன்மார்கள் இயற்றிய நூல்கள் பன்னிருதிருமுறைகள் ஆகும.;; பக்திசார்ந்த இலக்கியங்களில் காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி சிறப்பானது. இதில் சிவபெருமானை அம்மையார் வருணித்த அழகும் அவரின் தோற்ற அமைப்பும் விளக்கப்பட்டுள்ளது. இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக அமைந்த பாடல்களே அற்புதத் திருவந்தாதி ஆகும். அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார.; சிவபெருமானிடம் தான் அடிமையான நிலை குறித்து பாடியுள்ளாhர். அம்மையாரின் பாடல் வழி சிவபெருமானிடம் கொண்ட பக்தி தெறியினை ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.

திருவந்தாதி, சங்கஇலக்கியங்கள், பக்திஇலக்கியங்கள், அறஇலக்கியங்கள்,

30/08/2019

365

19356

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication