ISSN : 2349-6657

அப்பணசாமியின் கொடைக்கோனார் கொலை வழக்கு -புதினம் காட்டும் சமுதாய நிலை

க.உண்ணமலை, க.சத்யா



சமுதாயம் என்ற சொல்லானது ஆறறிவு படைத்த மக்களினத்தோடு நிற்கும் ஒன்றாகும். மனிதகுலம் தோன்றிய கால கட்டத்திலிருந்து மனிதர்கள் ஒரு குழுவாக சேர்ந்து வாழ முற்பட்டதன் விளைவாக ஓவ்வொரு மனிதனும் ஏனைய மனிதர்களோடுக் கொண்டிருக்கின்ற சிக்கலான விளைவே சமூக உறவு முறைத் தொடர்புகளைத்தான் சமூகம் என்கிறோம். சமூக உறவு முறைகள் தான் சமுதாயத்தை உருவாக்குகின்றன. மனிதன் தன் தேவைகளைத் தாமே பூர்த்திசெய்ய முடியாது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டுமென்றுஇ என்று நினைத்தானோ அன்று தான் சமுதாயம் உருவாகி இருக்க வேண்டும்.. மேலும் மனித வாழ்வோடு சமுதாயம் பிணைந்த நாளே சமுதாயம் உருவான நாளாகும் என்று அறுதியிட்டுக் கூறலாம். இப் புதினத்தில் சமுதாய நிலை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும். சமுதாயம் மக்கள் ஓரிடத்தில் கூடி உறவு முறைகளோடு பிணைக்கப்பட்டு வாழும் குழு அமைப்பே சமூகம் எனப்படுகிறதுஇ சமூகம் என்பது மக்களை மிக நெருக்கமாகப் பிணைக்கவல்ல கட்டுப்பாடுடைய அரசியல்இ சமயம் போன்ற நிறுவனங்களில் தங்களை இரண்டற இணைத்துக் கொண்டு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட இடத்தில் கூடி வாழும் மக்கள் குழு எனலாம் .அவ்வகையில் அப்பணசாமியின் கொடைக்கோனார் கொலை வழக்கு -புதினம் காட்டும் சமுதாய நிலை குறித்து அறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

அப்பணசாமியின் கொடைக்கோனார் கொலை வழக்கு

17/09/2021

378

19368

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication