Abstract Proceedings of ICIRESM – 2019
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
சங்க இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் புலமைத்திறன்
ஒரு நாட்டின் மாண்பையும் பாண்பாட்டு வாழ்வையும் மகளிரின் திறத்தாலே அறியலாம். இவ்வடிப்படையில் மக்கள் பாகுபாடு, உணவு. உடை, தெய்வ நம்பிக்கைகள், நிமித்தங்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள், போர் கருவிகள், அறநிலை. வீரர் மரபு, மரம், செடி கொடிகள் பூக்கள், விலங்கினங்கள், பறவைகள் போன்ற இன்ன பிற செய்திகளை சங்க இலக்கியப் பாடல்கள் மூலமாக அறியலாம்.
புலமை வல்ல மகளிராக நாம் தெரிந்தோரின் பாடல்கள் சங்கத்து நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுள் மட்டுமே காணப்படுகின்றன. சங்க வரலாறும், போர் வரலாறும், சமுதாய மரபும் கலையியலும், உறவியலும் பின்னிப் பொலியும் பதிவிலக்கியமாகவே சங்கப் பாடல்கள் திகழ்கின்றன.
மக்களுக்குத் தேவை பெருகலால் தொழில்கள் பெருகின. தொழில் துணை வேண்டும். அதனால்தொழில் செய்வோர் ஓரிடத்தில் ஒன்று வாழத் தலைப்பட்டனர். அங்ஙனம் வாழ அவர்களுக்கு இடங்களும் குன்றத்தில் குரவர் வயலில் உழவர், காட்டில் ஆர், கட உமணர், வறண்ட பாலையில் மறவர்,என்றெல்லாம் மக்கள் தொழில் நலத்து வேறாகப் பிரிந்து, இன நலத்தால் இணைந்து வாழ்ந்தனர். இப்பாடல்களின் வழி பெண்பாற்புலவர்களpன் புலமைத் திறன் குறித்து அறியலாம்.
பெண்பாற் புலவர்களின் புலமைத்திறன்
30/08/2019
383
19373
IMPORTANT DAYS
Paper Submission Last Date
October 20th, 2024
Notification of Acceptance
November 7th, 2024
Camera Ready Paper Submission & Author's Registration
November 1st, 2024
Date of Conference
November 15th, 2024
Publication
January 30th, 2025