ISSN : 2349-6657

கருணைக்கொலை நாவலில் சமுதாயச் சித்தரிப்பு

வ.சரிதா, க.சரண்யா



பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல், உளவியல் வளர்ச்சியினால் வாழ்க்கையை கற்கிற கல்வி, மானிடவியல், வரலாற்றியல், பொருளாதாரவியல், நாட்டுப் புறவியல் எனப் பலவாறு பெருகிச் செழித்துள்ளது. இதன் விளைவாக ஒவ்வொன்றையும் இலக்கியத்தோடு இணைத்துப் பார்க்கும் பார்வையும் வளர்ச்சியுற்றது . இலக்கியம் ஒரு சமுதாய நிறுவனமாக காணப்பட்டது. இலக்கியத்தின் ஆதாரமாக விளங்கும் மொழியே ஒரு சமுதாயத்தின் படைப்புதான். இலக்கியம் பயன்படுத்தும் யாப்பு. உத்திகள்இ முதலியனவும் சமுதாயத்திலிருந்து உருவானவைதான். பொருள் முதல்வாதம் பேசிகின்ற மார்க்சிய அறிஞர்கள் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவினை மிக நுட்பமான தளத்தில் எல்லாம் கண்டடைந்து கூறியுள்ளனர். அதனால் பல சமயங்களில் மார்க்சியத் திறனாய்வு சமுதாயத் திறனாய்வு என்று பொருள் கொள்ளப்படுகிறது. சமூகவியல் அணுகுமுறை, இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமான உறவினைச் சமூகத்தின் பிற அடிப்படை அலகுகளான குடும்பம், மதம், அரசு, கல்வி, பொருளாதாரம் முதலியவற்றோடும் இணைத்து எவ்வாறு இந்நாவலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருணைக்கொலை நாவல்

17/09/2021

373

19364

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication