ISSN : 2349-6657

மாணிக்கவாசகர் தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளி எழுச்சி ஓர் ஆய்வு

சி.ரேகா, நா.பரமேஸ்வரி



இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகஅமைகிறது. மனிதன் தன்னுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அவற்றுள் குறிப்பாக பக்திஇலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் அறக்கருத்துக்கள் அமைந்துள்ளன. இறைவனை வணங்க வேண்டும் அப்போது நான் பிறவிப்பயனை அடைய முடியும் என்ற கருத்துக்களும் இடம் பெறுகின்றன. பக்தி இலக்கியம் தோன்றிய காலக்கட்டம் பல்லவர் ஆட்சி காலமாக காணப்பட்டது. சமயச்சிந்தனைகளில் அறவுணர்வும் தத்துவ ஆராய்ச்சியும் முக்கிய இடம்பெற்றதாயினும் வழிபாட்டு முறைகளே பக்திஇலக்கியம் உருப்பெற்று வளர்ந்ததற்கு காரணம் ஆகும்.. பக்திஇலக்கியத்தில் காணப்படும் சைவம், வைணவம் என்ற சமயத்தில் இடம்பெறும் சிவன். திருமால் இயல்புகள் அறியும் முறை இந்தியா முழுவதும் பரவியிருந்த சிந்தனை ஆகும். பக்திஇலக்கியம் நாயன்மார்களும் ஆழ்வார்களும் அருளிச் செய்தது ஆகும். பக்திஇலக்கியம் மக்களைப் பாடாது இறைவனைப் பாடுவது, இறைவனைப்பாடுவது என்னும் போது திருக்கோவில்களைப் பாடுவது என்பது பொருளன்று. இறையனுபவத்தைப் பாடுவது என்பது தான் பொருள். இறைவனை பாடுதல் இரண்டுவகை ஆகும். ஒன்று உலகியல் வட்டத்திலிருந்து பாடுதல், பிறிதொன்று இறை வட்டத்திலிருந்து பாடுதல் ஆகும். தெய்வம் மீது கொண்ட அன்பினால் உணரச்சி கொந்தளிக்கும் வகையில் பாடல் அமைகின்றன. இவ்வாறு இறைவன் மீது கொண்ட அன்பினால் பக்தி பாடல்கள் சைவம், வைணவம் என்ற இரு சமயத்தில் ஏற்பட்டது. சைவ சமயக் கடவுளான சிவனின் அற்புதங்களையும் அவரின் சிறப்புகளையும் பாடியவர்களே அறுபத்துமூன்று நாயன்மார்கள் ஆவார்கள். ஆரா அமுதாகிய இறைவனை அமுததமிழிற் பாடியவர்களே ஆழ்வார்கள் ஆவர். வைணவ சமயக்கடவுளான திருமாலைப் புகழ்ந்து பாடியவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கபட்டனர். அமுதை அமுதாற் பாடியதால் அவர்களின் படைப்புகள் அமுதச் சொல் மாலைகள் ஆயின. மாணிக்கவாசகர், தொண்டரடிபொடியாழ்வார் திருப்பள்ளி எழுச்சி ஓர் ஆய்வு பாடல்களில் இடம்பெறும் திருப்பள்ளி எழுச்சி என்ற பாசுரம் சைவம், வைணவம் என்ற இரு சமயத்தில் எவ்வாறு இடம் பெறுகிறது என்பதை அறியும் வகையில் இவ்வாய்வு அமைகிறது.

தொண்டரடிபொடியாழ்வார் திருப்பள்ளி எழுச்சி

17/09/2021

369

19360

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication