ISSN : 2349-6657

ஏலாதியின் மருத்துவ குணங்கள்

முனைவர்.கு.கௌரி, மா.கவரிமாமொழி



மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இலக்கியங்கள் இயற்றப்படுகின்றன. அந்தந்தக் காலச் சூழலுக்கு எற்ப மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக இலக்கியங்கள் விளங்குகின்றன. இங்ஙனம் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையை வாழ்ந்து காட்டிய நம் முன்னோர்கள், தாம் படைத்த இலக்கியங்கள் வழி அறக்கருத்துக்களை இனிதே உணர்த்தியுள்ளனர். சான்றோர் கூறிய அறிவுரைகளைக் கேட்டு அதன்படி வாழும் வாழ்க்கை இனிமையும் எளிமையும் பெருமையும் உடையதாகிறது. வாழ்க்கையில் உண்டாகும் இன்பதுன்பங்கள் நெளிவு சுளிவுகளை உணர்ந்து அனுபவம் நிறைந்த கருத்துக்களின் மூலம் தவறான பாதையில் இருந்து நல்வழிப்படுத்துகின்றனர். அறிவுடைய சான்றோர் கூறும் அறிவுரைகள் நம்மை தவறான பாதையில் இருந்து விலக்கி வாழ்க்கை அன்புடையதாகவும் பண்புடையதாகவும் பிறர்க்குப் பயனுடையதாகவும் விளங்க உரிய சிந்தனைகளை அளிக்கின்றனர். வாழுகின்ற மக்களுக்கும், வாடிப்போகும் மக்களுக்கும் பாடாமாக வேண்டும் என்பதை அவர்கள் தங்களின் வாழ்க்கையில் பட்டறிவு மூலம் கண்ட வாழ்வியல் சிந்தனைகளை இலக்கியங்களின் வழியாக சமூகத்திற்கு வழங்கியுள்ளனர். அறநூல்களில் ஒன்றான ஏலாதியில் மக்களுக்கான ஒழுக்கங்களை எடுத்தியம்புவதாக அமைகின்றது. ஏலம் என்றால் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்பது பொருள். இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம், சிறுநாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக் கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது. அகவாழ்விற்கும் புறவாழ்விற்கும் ஏலாதி எவ்வாறு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது என்பதை ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாக அமைகின்றது.

ஏலாதி

30/08/2019

366

19357

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication