ISSN : 2349-6657

பத்துப்பாட்டில் பொ.வே.சோமசுந்தரனாரின் உரைமரபு

S.DINESHKUMAR



தமிழ் மொழியில் பழங்காலந் தொட்டே இலக்கண நூல்களும், இலக்கிய நூல்களும், சமயநூல்களும் தோன்றியுள்ளன. அவ்விலக்கியங்களுக்கு விளக்கம் செய்யும் உரை நூல்களும் தோன்றியுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைகளுக்குத் தனித்த இடம் உண்டு. தமிழ்ப்புலவர் இடைக்காலத்தில் செய்த இலக்கிய ஆராய்ச்சியின் விளைவாகவே பண்டைய தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரைகள் தோன்றின. அவ்வுரைகள் தமிழ்மொழிப் பயிற்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பேருதவி செய்கின்ற வகையில் அமைந்துள்ளன. இலக்கியங்களின் பொருளினை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்வதில் உரையாசிரியர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். அவ்வாறு உரைகூறுமிடத்து உரையாசிரியர்கள் தங்களுக்கு ஒரு உடரை மரபை உருவாக்கிக் கொள்கின்றனர். அவ்வகையில் பத்துப்பாட்டுத் தொகுப்புக்கு எழுதப்பட்ட உரையை ஆராய்வதாக இவ்வாய்வுப் பொருள் அமைகிறது தமிழ் இலக்கிய வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையுடையது. ஆனால் தமிழ் இலக்கியப் பதிப்பு வரலாறு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தொடங்குகிறது. ஏட்டுச் கவடிகளில் செல்லரித்துக் கிடந்த தமிழ் இலக்கியங்கள் அச்சுரு பெறாமல் போயிருந்தால் தமிழ் இலக்கிய வரலாறு மாறிப்போயிருக்கும். சிலப்பதிகாரத்தின் பெயர் 'சிறப்பதிகாரம்' என்றும், இதனை இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார் என்றும் பேசப்பட்டு வந்ததைப் பதிப்பு வரலாறுதான் சரிபடுத்தியது. தமிழுக்குச் செம்மொழித் தகுநியைப் பெற்றுத் தந்த சங்க இலக்கிய நூல் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டில் அமைந்த நூல்கள் ஒவ்வொன்றும் தனிநூலாகவும், தொகுப்பு நூலாகவும். விளக்க கவிதை நூலாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இப்பத்துப்பாட்டு நூல்களின் பதிப்பு வரலாறு இவ் இயலில் ஆராயப்படுகின்றது.

பத்துப்பாட்டில்

17/09/2021

313

IESMDT311

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication