ISSN : 2349-6657

திருக்குறளில் மருதத்திணைக்கான கூறுகள்

முனைவர்.C.வெண்மதி, P.ஞானம்பால்



இன்று தமிழிலுள்ள நூல்களிலேயே திருக்குறள் தான், உலகப் புகழ் பெற்ற நூலாக விளங்குகின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் தோன்றிய குறளிலுள்ள அறங்கள் இன்றும் பொறுத்தமாக உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் பொதுவான செய்யப்பட்ட நுலாகும். இதனால் உலகப் பொதுநூல் எனப்பட்டது. தமிழில் முதன்முதலில் தோன்றிய அறநூல் இதன் மதிப்பினை அறிய இதற்கு அமைந்திருக்கும். அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. இதில் இன்பவியல் இல்லறக் காதல் மற்றும் கடமைகள் என்னவென்று கூற முற்படுகிறது. ஆண் பெண் ஒன்றுபட்ட உண்மையான உறவினால்தான் தனித்தனிக் குடும்பங்கள் தோன்றின. எனவே இன்பத்தைப் பற்றிக்கூறும் மூன்றாவது பகுதியாக வைத்துள்ளார் வள்ளுவர். இல்லற வாழ்வியல் தலைவன் தலைவிக்குமிடையே ஏற்படும் ஊடல் களவு, கற்பு குறித்து திருவள்ளுவர் எவ்வாறு கூறியுள்ளார் என்பதை குறித்துக் கண்டறிதலும், மேற்கண்ட கருத்துக்களனைத்தும் விளங்கும் நூலும், தமிழில் வேறு எதுவும் இல்லை. இங்கு மருதத்திணைக்கான கூறுகள் திருக்குறளில் எம்முறையில் காணலாகிறது என்பதைக் குறித்து ஆய்தலே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.

திருக்குறள்

13/11/2020

397

20397

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication